சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், மே 09ஆம் திகதி காலிமுகத்திடல் தளத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் தேசபந்து தென்னகோனை சந்தேகநபராக பெயரிடுமாறும், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் ரிட் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை போராட்டத்தை ஆதரித்த வழக்கறிஞர் ராமலிங்கம் ரஞ்சன் தாக்கல் செய்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் மேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் இங்கு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.