இலங்கையில் 5G தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு தொடங்க திட்டம்!

Date:

இலங்கையில் 5G தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அடுத்த வருடம் மேற்கொள்ளப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற தொழில்நுட்ப அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இணைய சேவை வழங்குனர்களால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 5G தொழில்நுட்பத்திற்காக TRCSL கோரிய அனுமதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, தொழில்நுட்ப அமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியில் விதாதா தொழில்நுட்ப நிலையங்களை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குழுவிடம் தெரிவித்தார்.

விதாதா நிலையங்களை மீண்டும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டு வந்து வேகமாக மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...