மாதாந்த எரிவாயு விலைத் திருத்தம் நாளை

Date:

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இம்முறை எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப இந்த நாட்டில் எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட வேண்டும் எனவும், ஆனால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், எரிவாயுவின் விலையை ஸ்திரமான நிலையில் பேணுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. .

அதற்கான முன்மொழிவுகள் நிதியமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் எரிவாயு விலை திருத்தம் செய்யப்படாத நிலையில், இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...