உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று (டிசம்பர் 09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 79 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டு 43 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பும் 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, திருத்தப்பட்ட உள்நாட்டு வருவாய் சட்டம் 01 ஜனவரி 2023 முதல் அமுலுக்கு வரும்.
N.S