18% வெட் உறுதி, சபையில் கிடைத்தது வெற்றி

Date:

வெட் வரி(VAT Tax) திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் இன்று(11) மாலை நிறைவேற்றப்பட்டது.

வெட் வரி திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பிற்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதற்கமைய, வெட் வரி திருத்தம் திருத்தங்களுடன் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வெட் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, குழுநிலை சந்தர்ப்பத்தில் அரசாங்கம் பல்வேறு திருத்தங்களை முன்வைத்தது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதுவரை 15 வீதமாக உள்ள வெட் வரியை 18 வீதமாக அதிகரிப்பதற்கு இந்த சட்டமூலத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...