கொழும்பில் பிரபல வர்த்தகர் கடத்திக் கொலை!

Date:

இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் பொரளை மயானத்திற்கு அருகில் காரில் விட்டுச் சென்ற ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார்.

தினேஷ் ஷாப்டர் கடந்த 14ஆம் திகதி பிற்பகல் கொழும்பு மல்பாறையில் உள்ள தனது வீட்டில் கடன் கொடுத்தவரைச் சந்திக்கப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

எனினும் சிறிது நேரத்தில் அவரது தொலைபேசி நிறுத்தப்பட்டதுடன், தொலைபேசியில் இருந்து கிடைத்த சமிக்ஞைகளின் பிரகாரம் அவர் பொரளை மயானத்திற்கு அருகில் இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, சந்தேகமடைந்த மனைவி, அந்த நிறுவன அதிகாரியை அந்த இடத்திற்கு அனுப்பி சோதனையிட்டார், அங்கு தினேஷ் ஷாஃப்டர் தனது காருக்குள் கைகள் கட்டப்பட்டு கழுத்தில் பிளாஸ்டிக் பேண்டால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15) இரவு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தினேஷ் ஷாஃப்டர் இறக்கும் போது அவருக்கு வயது 51.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...