தேர்தல் பிரசாரத்துக்கு தயாரான ஜனாதிபதி

Date:

தம்மிக்க பெரேராவை முன்னிறுத்தி, பெசில் மற்றும் நமல் ஆகிய இருவரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்த போது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பது தொடர்பில் கடந்த வாரம் பல முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

“ஜனாதிபதி தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளார்” என்றும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் பலர் அதற்கு தலைமை தாங்கவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, திலும் அமுனுகம, ஷெஹான் சேமசிங்க, கனக ஹேரத், பிரமித்த தென்னகோன் ஆகியோர் பிரச்சாரத்தின் முக்கியஸ்தர்களாக உள்ள நிலையில், பிரச்சார முகாமையாளராக சாகல ரத்நாயக்க செயற்படுகிறார் எனவும் அந்தச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஜனாதிபதியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் முன்னோடிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டாலும், இன்னும் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.

எனினும், எதிர்வரும் ஆண்டில் முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படுமா, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா என்ற விஷயம் பற்றி இன்னும் தெளிவாகச் சொல்லப்படவில்லை.

இது குறித்து இருதரப்பு வாதங்கள் அரசியல் அரங்கில் அதிகம் பரிமாறப்படுகின்றன. “எப்படியும் அடுத்த வருடம் தேர்தல் வரப்போகிறது. நாம் தயாராக இருக்க வேண்டும்” என்றுதான் பெரும்பாலான அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...