அக்குறணை, துனுவில பிரதேசத்தில் பாறை சரிந்து வீடொன்று புதையுண்டதில் பெண் ஒருவர் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது வீட்டினுள் 5 பேர் இருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், அப்பகுதி மக்களின் ஆதரவுடன் பாறை மற்றும் மண்ணை அகற்றி காயமடைந்தவர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அங்கு தாய், தந்தை, இரண்டு சிறுமிகள் மற்றும் ஆண் ஒருவர் ரூபிளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டு ஜம்புகஸ்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிறுமி (18) மற்றும் சிறுவன் (16) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தின் போது காயமடைந்த 12 வயது சிறுமி பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் ரணசிங்க தெரிவித்தார்.
N.S