அரசியலமைப்புச் சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
21ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின்படி நிறுவப்படும் அரசியலமைப்பு சபையில் பத்து உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டதாகவும், கிட்டத்தட்ட நூற்றி இருபது விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
N.S