இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Date:

இன்றைய தினம் (டிசம்பர் 26) வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவ, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடை லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சபரகமுவ மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கு அதிகமான கனமழையும் பதிவாகலாம்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மாகாணத்திலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைத்துக் கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...