உடல்நலம் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் (Erbil International Airport) உயிரிழந்துள்ளார்.
நடுவானில் விமானம் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் விமானம் அவசரமாக எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு சிகிச்சை பயணளிக்காமையால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றதாக குர்திஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கௌரவ அதிகார அஹமட் ஜலால் தெரிவித்துள்ளார்.
எர்பிலில் உள்ள இலங்கையின் கெளரவ தூதரக அதிகாரி அஹமட் ஜலால்,
டோஹாவில் இருந்து பாரிசுக்கு இந்தப் பெண் விமானத்தில் சென்றுக்கொண்டிருந்த போது இவ்வாறு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளதுடன், தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கெளரவ தூதரக அதிகாரி அஹமட் ஜலால், கூறியுள்ளார்.
81 வயதான குறித்த இலங்கை பெண் பிரான்சில் வசித்து வருபவர் என குர்திஸ்தானில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் கூறியுள்ளதுடன், இவரின் சடலத்தை பிரான்ஸுக்கு கொண்டுசெல்ல அவரது மகனுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் துணை தூதரகம் கூறியுள்ளது.
“இலங்கை பிரஜை ஒருவருக்கு இப்பகுதியில் இதுபோன்ற சம்பவமொன்று நடப்பது இதுவே முதல் முறையாகும்” என தூதரக அதிகாரி அஹமட் ஜலால் கூறியுள்ளார்.