தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Date:

9 மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

தட்டம்மை நோயாளர்கள் அதிகம் பதிவாகும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கல்முனையிலும் இந்த தடுப்பூசி ஏற்றும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் ஜனவரி 06 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.2019 ஆம் ஆண்டில் தட்டம்மை நோயை ஒழித்த நாடாக இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...