விக்கியைப் போல் நேரத்துக்கு நேரம் கொள்கையை மாற்றுபவர்கள் நாம் அல்லர் – சாணக்கியன் தெரிவிப்பு

0
162

“விக்னேஸ்வரனைப் போல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொள்கையை மாற்றுபவர்கள் நாம் அல்லர். நாம் மக்களுக்காக ஒரே பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி., ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான அண்மைய சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் அவரைப் போல் நாம் நேரத்துக்கு நேரம் – மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொள்கையை மாற்றுபவர்கள் கிடையாது. எடுத்த முடிவில் எமது கட்சி இறுதி வரைச் செயற்படும்.

இதேவேளை, தமிழர்களுக்குத் தீர்வு வழங்குவேன் என்று தொடர்ச்சியாகக் கூறி வருகின்ற ரணில் விக்கிரமசிங்க, கடந்த மார்ச் மாதம் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பேன் என்றும் பொய்யுரைத்திருந்தார். இவ்வாறான நிலையில் பல ஏமாற்றங்கள் இருந்தாலும் ஜனாதிபதியுடனான சந்திப்புக்களில் நாம் கலந்துகொள்கின்றோம். இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல விடயங்களை என்னால் முன்னெடுக்க முடிகின்றது.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here