கிளி மகாராஜா நினைவாக சஜித் செய்யவுள்ள சமூகப் பணி

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்வரும் 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குப் பயணம் மேற்கொள்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு யாழ். வரும் சஜித், காலை 8.30 மணிக்கு ஊடக சந்திப்பை நடத்தவுள்ளார்.

அதன்பின்னர் நயினாதீவு சென்று, நயினாதீவு விகாரை மற்றும் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அமரர் இராஜமஹேந்திரனின் நினைவாக தெல்லிப்பளை தளமருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளது.

மாலை 3.30 மணிக்கு திருநகரில் அரசியல் கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றிரவு 7 மணிக்கு யாழ். வியாபார சமூகத்துடனான சஜித்தின் சந்திப்பு இடம்பெறவுள்ளது.அதன்பின்னர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சஜித் செல்கின்றார்.

11ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணம் வருகின்றார். அன்று முக்கியத்துவமிக்க சந்திப்புகள் நடைபெறவுள்ளன.12ஆம் திகதி நல்லூர் கோயிலுக்குச் செல்வார். யாழ். ஆயரைச் சந்தித்துக் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்றும் (02) காலை 8.00...

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...

புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு

2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி...

மேலும் ஒரு கடல் வழி போதை பொருள் கடத்தல் – அறுவர் கைது

இலங்கை கடற்படையினர் தென்மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மேற்கொண்ட சிறப்பு...