தற்போது சிறைத்தண்டனையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணத் தொகுப்பிற்கு சட்டமா அதிபரின் மேலும் ஒரு பரிந்துரை தேவை என தெரிவித்த அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கவை விடுவிப்பதற்கான கடிதம் கிடைத்தவுடன் ஜனாதிபதி கையொப்பமிடுவார் எனவும் தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் சில தினங்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.