கொழும்பில் நாளை (09) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடைசெய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் குருந்துவத்தை பொலிஸ் அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையில் தலையிட முடியாது என்றும், எனினும், போராட்டத்தின் போது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டாலோ, சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ, அது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் தலைமை நீதிபதி வலியுறுத்தினார்.
கடந்த ஏப்ரல் 09ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாதமும் 9ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில், அந்த பாரிய எதிர்ப்புக்களால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை கோத்தபாய ராஜபக்சவும், மஹிந்த ராஜபக்ஷவும் விட்டுக்கொடுக்க நேரிட்டது.
நாளையும் இதேபோன்று போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.