நாட்டில் தற்போது நிலைமை சீராகியுள்ளதால் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நேரத்தை நாங்கள் செலவிடுகிறோம். கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் கடுமையான அரசியல் ஸ்திரமின்மை காரணமாக இலங்கை இழந்ததைக் கணக்கிடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஆனால் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளோம். எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் நமக்கு சவாலாக உள்ளது. நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதால், அவசரகாலச் சட்டத்தை இனி நீடிக்கப் போவதில்லை. இது இந்த வார இறுதியில் முடிவடைகிறது. ஆனால் அது மட்டும் போதாது. நாம் எப்படி முன்னேறுகிறோம் என்பது பற்றிய அணுகுமுறையில் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை நாம் உருவாக்கினால், இந்த நாட்டிற்கு எதிர்காலம் இருக்கும், இல்லையென்றால், இந்த நாடு மற்றொரு லெபனானாக மாறும்.
நேற்று (16) நடைபெற்ற அறிஞர்கள் சங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்