போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 08 சந்தேக நபர்கள் கைது

0
217

கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற குழப்பமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி கடுவெல பிரதேசத்தில் பேருந்து எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் 19, 20, 29, 40 வயதுடையவர்கள்.

இந்த சந்தேக நபர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, மே 10ஆம் திகதி, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு. தேஷ்பந்து தென்னகோன் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31, 51, 52 வயதுடைய இந்த சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் பிடபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை திருடி வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் கொட்டாவ பகுதியில் நபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் இது மேற்கொள்ளப்பட்டது.

கல்பொக்க அரநாயக்க பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய இந்த நபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here