முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (16) முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த உத்தரவை வழங்கினார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலினால் ஒரு காலை இழந்த யேசுராஜ் கணேசன் மற்றும் தந்தை சிறில் காமினி ஆகியோரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல் கிடைத்த போதிலும், அப்போது பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பிலான உண்மைகளை முன்வைப்பதற்காக சிறிசேனா நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.