ஆட்பதிவு செய்யும் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை ஆகிய நிறுவனங்களை பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைத்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (05) இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
டிரான் அலஸ் பொது பாதுகாப்பு அமைச்சராக செயற்படுகிறார்.