வேலை நிறுத்தம் செய்யத் தயாராகும் தனியார் பஸ்கள்

0
132

வரும் 25ம் திகதி முதல் தனியார் பஸ்களை சேவையில் இருந்து வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

லீசிங் நிறுவனங்கள் தங்கள் பேருந்துகளை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இது நத்தப்பட உள்ளது.

இதுவரையில் சுமார் 50 பஸ்கள் லீசிங் நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் 3000 பஸ்களை கையகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக நாடுமுழுவதும் தனியார் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்துகளுக்கு உரிய டீசல் கிடைக்காததால் தனது தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, விடுபட்ட லீசிங் தவணைகளை செலுத்துவதற்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரை கால அவகாசம் தேவை என தனியார் பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

25ஆம் திகதிக்கு முன்னர் போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதான லீசிங் நிறுவனங்களுடன் கலந்துரையாடி லீசிங் நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள 50 பஸ்களை பஸ் உரிமையாளர்களிடம் மீளப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக பிரியஞ்சித் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இல்லை என்றால் வரும் 25ம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here