தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மக்கள் மீது வரியை சுமத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (27) கொழும்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளன.
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலைய ஐக்கிய மக்கள் இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், கடற்றொழிலாளர் சங்கங்கள், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள் என பெருந்திரளானோர் பங்கு கொள்கின்றனர் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஐக்கிய மக்கள் இயக்கத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெறவுள்ள இந்த மாபெரும் கண்டனப் பேரணியில் கலந்துகொள்வதற்கு அனைவரும் அழைக்கப்படுவார்கள்.