Sunday, December 22, 2024

Latest Posts

தமன்னாவுக்கு திருமணம்

விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளவர் தமன்னா.

தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ஏற்கனவே இதுபோல் திருமண கிசுகிசு வந்தபோது தமன்னா உடனடியாக மறுத்தார். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று கூறினார்.

ஆனால் தற்போது திருமண ஏற்பாடுகள் நடப்பதாக வலைத்தளத்தில் மீண்டும் பரவி வரும் தகவலுக்கு தமன்னா மறுப்பு எதுவும் சொல்லவில்லை.

தமன்னா திருமண முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் என்று முன்பு கூறியிருந்தார்.

தற்போது பெற்றோர்தான் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்றும், அவரை மணக்க தமன்னாவும் சம்மதித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.