VAT (திருத்தம்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

Date:

பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

VAT (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பைத் தொடர்ந்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றாவது வாசிப்பில் வாக்களிப்பு இடம்பெற வேண்டுமென கோரினர், இதன் போது 82 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர் மற்றும் 41 பேர் எதிராக வாக்களித்தனர்.

இரண்டாவது வாசிப்பின் போது சட்டமூலத்துக்கு ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் கிடைத்தன.

பாராளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானதுடன், வட் (திருத்தம்) சட்டமூலம் மற்றும் உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...