வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகள் தொடர்பில் ஆய்வுகூட பரிசோதனை நடத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
அண்மைய நாட்களில் பதிவான காலநிலை மாற்றத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த கால்நடைகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையை வழங்குமாறு விவசாய அமைச்சர் திரு.மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தியாவை பாதித்த சூறாவளியுடன் கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையோரங்களில் ஏற்பட்ட கடுமையான குளிர் காலநிலை காரணமாக இந்த விலங்குகள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆனால் இந்த விலங்குகள் ஏதேனும் தொற்றுநோய் காரணமாக இறந்ததா? என்பது குறித்து ஆராய இறந்த அனைத்து விலங்குகளின் மாதிரிகளையும் கால்நடை துறையினர் எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
N.S