தேர்தலுக்கு சிறந்த முறையில் தயாராக உள்ள கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான அனைத்து அடிப்படைத் தேவைகளும் தற்போது நிறைவடைந்து வருவதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், தேர்தலை நடத்துவது அல்லது நடத்தாமல் இருப்பது அரசியலமைப்பு ரீதியாக அந்த செயல்பாடுகளில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிறுவனங்களுடன் தொடர்புடையது.
எதிர்காலத்தில் பரந்த கூட்டணியாக தேர்தலுக்குச் செல்லத் தயார் எனத் தெரிவித்த அவர், அண்மையில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்க வந்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
N.S