தேர்தல் திகதியை இன்னும் வர்த்தமானியில் வெளியிடாமல் இருப்பது ஏன்?

0
168

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என அறிவித்தல் வெளியிடப்பட்ட போதிலும் தேர்தல் திகதி இன்னும் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை எனவும் வர்த்தமானி வெளியிடப்படவில்லை எனவும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டால் தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு ஆணைக்குழுவில் எத்தனை உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்தனர் என்பதை மக்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் திகதியை ஊடகங்களுக்கு அறிவிப்பது அல்ல, வர்த்தமானி மூலம் அறிவிப்பதுதான் சட்டம் என்றும், 21வது அரசியலமைப்பு மற்றும் 21வது அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னணியில் தேர்தல் ஆணைக்குழுவும் குழப்பமான நிலையில் இருப்பதாகவும் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபையின் கூட்டம் புதன்கிழமை (25) கூடவுள்ளது. இந்நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்ததால், தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கும் இதேபோன்ற நடவடிக்கையை பின்பற்ற வேண்டும், மேலும் முழு ஆணைக்குழுவும் தேர்தல் திகதியை முடிவு செய்து, தேர்தல் திகதியை வர்த்தமானியில் அறிவிக்கவில்லை என மறைமுகமாக கூறுவது என்ன என்று கேள்வி எழுப்புகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here