நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அஜித் பிரசன்னவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

0
263

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னாவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையுடன் 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்தும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகளான ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பில் பல கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் அஜித் பிரசன்ன மற்றும் இரண்டு கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உட்பட மூன்று பிரதிவாதிகள் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி சாட்சிகளை மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here