ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் தொழில் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதாகக் கூறினார். கடந்த இரண்டு வருடங்களாக விமர்சித்து வருபவர்கள் விமர்சிக்கிறார்கள் என்று நமது பிரதமர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள நாங்கள் இந்தப் புதிய பயணத்தில் இழுத்தடிக்கத் தயாராக இல்லை. இந்த அரசாங்கம் நாம் உருவாக்கிய அரசாங்கம். இதன் வாரிசுகள் மொட்டு கட்சியினர் மட்டுமல்ல. இதற்கு நாங்கள் பங்களித்தது மட்டுமல்ல, நாங்கள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள். இந்த அரசாங்கத்தை பாதுகாக்கவும் இந்த அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டவும் எங்களுக்கும் உரிமையும் கடமையும் உள்ளது.”
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (17) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.