தமிழர் தேசம் ஆக்கிரமிப்புக்கு எதிரான பேரணி கிழக்கில் – வீடியோ

Date:

தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து பல்கலைக்கழகம் மாணவர்கள் ஏற்ப்பாடு செய்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி இறுதி நாள் சற்று முன்னர் வெருகல் சித்திரவேலாயுத சாமி கோவில் இருந்து ஆரம்பித்துள்ளது.

இதன்போது, தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து எனும் கோசங்களுடன் பல்கலை மாணவர்கள், சமூக அமைப்பினர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலர் பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கடந்த 4 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு, சுதந்திர தினத்தன்று வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு கறுப்பு கொடிகள் தொங்க விடப்பட்டு கறுப்பு தினமாக முன்னெடுக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை நிலவரம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அமைதியான போராட்டம்

கொழும்பு LNW: ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரும் சர்வதேச காணாமல்...

சிகிச்சை முடிந்து வெளியேறிய ரணில்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்...

சஷீந்திரவுக்கு பிணை மறுப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக...