தனது அனுமதியின்றி அண்மையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியமை தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனிப்பட்ட முறையில் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளேன்.
30 முதல் 90 வரையிலான மின்சார அலகுகளைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட 5 மில்லியன் மக்களுக்காகவே மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டணமானது 250% அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு நீதியை பெற்றுத் தருவதற்காக நீதிமன்றத்திற்குச் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
N.S