வெளிநாடு சென்ற மகிந்தானந்தவை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!

0
200

கடந்த 10ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாடு செல்வதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவை தடுக்கும் வகையில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு பயணங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறி அவரது வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தனக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையை நீதிமன்றம் விதிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளதோடு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தரவு அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாகவே இவ்வாறான பிழை ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், உண்மைகளை வெளிக்கொணர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு அதிகாரிகள் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தரவு முறைமையை சரிசெய்ததன் பின்னர், மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு இன்று வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here