2022 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
A/L பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுமோ அது O/L பரீட்சையை நடத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும். O/L பரீட்சை மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் A/L பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எடுக்கும் நாட்களின் எண்ணிக்கை காரணமாக தாமதமாகும்.
பரீட்சை திணைக்களத்திற்கு இரண்டு பரீட்சைகளுக்கு இடையில் குறைந்தது மூன்று மாத இடைவெளி தேவை. எனவே, திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்த முடியுமா என்பதை அமைச்சு எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.
N.S