ஒரு கோப்பை பால் தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் (AICOA) தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
விலை குறைபின் பின் ஒரு கப் பால் தேநீர் ரூ.90 இற்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மா பக்கட்டின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் 400 கிராம் பக்கட்டின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
n.s