மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்!

0
132

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்த முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“நிச்சயமாக ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசுகிறேன். இத்தருணத்தில் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற கருத்து எமது பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் உள்ளது. அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அடுத்த தேர்தல் என்ன என்று தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தல் நடந்தால், அந்த நேரத்தில் கட்சி என்ற வகையில் சிறந்த முடிவுகளை எடுப்போம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here