சீனா செல்லும் இலங்கை குரங்குகள்!

Date:

விவசாய அமைச்சின் கூற்றுப்படி, நாட்டில் அதிகரித்து வரும் குரங்குகள் சனத்தொகைக்கு தீர்வு வழங்கும் வகையில் சீனாவில் இருந்து குரங்குகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கை குரங்குகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக இலங்கையில் 100,000 குரங்குகளை வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் விவசாய அமைச்சு, தேசிய விலங்கியல் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்று இணைந்துள்ளதுடன், சபையின் அனுமதியின் பேரில் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

வெளிநாட்டுக்கு வளர்ப்பு பிராணிகளை வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை அமைச்சர்கள் ஆராயவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது நமது நாட்டின் குரங்குகள் தொகை 30 லட்சத்தை நெருங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்நாட்டில் பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் குரங்குகள் முதன்மையானது.

குரங்குகளின் சனத்தொகையைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ள பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் மற்றுமொரு நாடு குரங்குகளை பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என குறிப்பிடப்பட்டதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில் இன்று...

குருக்கள்மடம் முஸ்லிம்களுக்கு நீதி

குருக்கள்மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதியைப் பெற்றுக்...

பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

பாதாள உலகக் கும்பல் தலைவன் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின்...

மனோ எம்பிக்கு முக்கிய அமைச்சர் வழங்கிய உறுதி

“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள்...