ஏப்ரல் மாதத்தின் முதல் 16 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 56,000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 400,000ம் சுற்றுலா பயணிகள் வரை நாட்டுக்குள் வந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள தரவுகளின் பிரகாரம், ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 56,402 பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தினசரி வருகை சராசரியாக 3500 ஆக இருந்துள்ளது. எவ்வாறாயினும், ஏப்ரல் 15ஆம் திகதி முதல் தினசரி சுற்றுலா பயணிகளின் வருகை 2,000ஆக உள்ளது .
ரஷ்ய, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
N.S