ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி கொழும்பு கோட்டை ஏ. இ. குணசிங்க மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதன்படி, மே மாதம் முதலாம் திகதி பிற்பகல் 01.00 மணியளவில் மாளிகாவத்தை பி. டி. சிறிசேன மைதானத்திற்கு அருகாமையில் பேரணி ஆரம்பமாகவுள்ளதாக கட்சியின் மே தினக் குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான மேதின கூட்டம் மற்றும் மேதினப் பேரணியை பெருந்திரளான கட்சியினர் கலந்துகொள்ளும் வகையில் மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மே தினக் குழு குறிப்பிட்டுள்ளது.