சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கடந்த சில வாரங்களாக அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரச நிர்வாகத்தின் மிக உயர்ந்த முடிவுகளை அங்கீகரிக்கும் நிர்வாகக் குழுவான அமைச்சரவையின் உறுப்பினராக, அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை ஏற்று அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பது ஒரு அமைச்சரவை அமைச்சரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும்.
இதன்படி, அமைச்சரவை கூட்டங்களை தொடர்ச்சியாக புறக்கணிக்க வேண்டாம் என ஏனைய அமைச்சரவை அமைச்சர்களும் ஹரின் பெர்னாண்டோவிடம் கூறியிருந்த போதிலும், அந்த நடைமுறையில் மாற்றம் இல்லை.
இந்நிலைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், விரைவில் இந்த விடயம் தொடர்பில் தனிப்பட்ட மட்டத்தில் கலந்துரையாடுவதற்கு கூட அவர் அழைப்பு விடுப்பார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.