எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மடுல்சீமைக்கு வந்து எமது மக்களிடம் மன்னிப்பு கேட்டால் மாத்திரமே கட்சியுடன் செயல்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், சஜித் பிரேமதாச மன்னிப்புக் கோராவிட்டால், ஐக்கிய மக்கள் சக்திகியிலிருந்து வெளியேறுவேன் எனவும் எச்சரித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மடுல்சீமையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருவதாக உறுதியளித்தும் வரவில்லை. எமது மக்களை அவர் புறக்கணிக்க முடியாது. சஜித் பிரேமதாச இங்கு வந்து மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நான் இனி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
N.S