முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2010ஆம் ஆண்டு கண்டி பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் கண்டி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 2010ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (21) கண்டி மேலதிக நீதவான் மொஹமட் ரபி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டு வழக்கு செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.