பாடசாலை பாடத்திட்டத்தில் இனி ஜப்பான் மொழி!

0
192

இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்பப் பிரிவில் இருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு அமைச்சரவை விசேட அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கல்வி அமைச்சுடன் இணைந்து சிறுவர்களுக்கு ஜப்பானிய மொழியை கற்பிப்பது தொடர்பான செயற்பாடுகள் தயாராகி வருவதாகவும், தற்போது ஜப்பானிய சந்தையை இலக்காகக் கொண்டு 5000 ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளர்களை கொண்ட குழுவை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here