ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பின்னரே இந்தியாவிற்கு என்ன விற்கப்பட்டது என்பதை அறிய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். முன்பெல்லாம் இங்கு வந்து வாங்கிச் செல்வார்கள்.இப்போது அங்கு விற்கச் சென்றுள்ளார். அதானியை சந்திக்க சென்றுள்ளார். அதானிக்கு என்ன விற்றார் என்று தெரியவில்லை. IMF சென்று ஒப்பந்தம் போட்ட பிறகுதான் நடந்தது தெரியும். அவற்றை இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோர விரும்புகின்றோம்.
மிகவும் கஷ்டப்பட்டு இந்த பாராளுமன்றத்திற்கு நிதி பலம் இருப்பதை தான் தெரிந்து கொள்ள வேண்டும். ரணில் நாடு திரும்பி வந்த பிறகுதான் இந்தியாவில் என்ன விற்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்” என எம்.பி தெரிவித்தார்.