பஸ் விபத்தில் 12 பேர் காயம்

0
212

ஹட்டன் கொழும்பு வீதியில் வட்டவளை பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ்ஸொன்று இன்று(01) அதிகாலை 4.30 அளவில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

மற்றுமொரு பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 12 பேரும் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here