சுதந்திர கட்சி அலுவலகத்திற்கு பூட்டு

0
249

டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் இன்று (06) மூடப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதான கதவும் பூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவை அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று பதவியில் இருந்து நீக்கியதுடன் அவரது கட்சி உறுப்புரிமையையும் தடை செய்திருந்தார்.

எவ்வாறாயினும், மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு சவால் விடுத்து இன்று பிற்பகல் நீதிமன்றில் தனது கருத்தை முன்வைக்க தயாசிறி ஜயசேகர தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here