2023 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் ஈட்டிய அதிகூடிய ஏற்றுமதி வருமானம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 1,119 மில்லியன் டொலர்களாக காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஈட்டிய ஏற்றுமதி வருமானத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 8.7% குறைவு என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் ஏற்றுமதி வருமானம் 8,010 மில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வருமானம் 10.1% குறைவு என்றும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், ஆடைத் துறையின் வீழ்ச்சியால் ஏற்றுமதி வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.