எயார்லைன்ஸ் விமானங்களின் தாமதத்தினால் 195 கோடி ரூபா நட்டம்

0
154

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்ற ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களின் தாமதத்தினால் 195 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே, ஊழியர்களுக்கு எந்த ஊதியத்தையும் அதிகரிக்க முடியாது என்று அமைச்சர் கூறுகிறார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடனாக உள்ளதாகவும், அதற்கான வட்டியை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

விமான சேவையின் உற்பத்தித்திறனை அதிகரிக்குமாயின் உற்பத்தித்திறன் அடிப்படையில் சில கொடுப்பனவுகளை வழங்க முடியும் என அவர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தொடர்ச்சியான தாமதத்தினால் விமானப் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விமான சேவை முகாமைத்துவம் மற்றும் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (2) அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here