இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது கொள்கை வட்டி வீதத்தினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றினை முறையே 100 அடிப்படை புள்ளிகளால் 10 வீதம் மற்றும் 11 வீதமாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
உள்நாட்டுப் பொருளாதாரத்தில் குறைந்த பணவீக்கம் மற்றும் தீங்கற்ற பணவீக்க எதிர்பார்ப்புகள் உட்பட தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்களை கவனமாக ஆய்வு செய்ததைத் தொடர்ந்து நாணயச் சபை இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக மத்திய வாங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டுகையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது.
சீன வங்கியின் பரிமாற்ற வசதியும் குறித்த தொகையில் அடங்குவதாக மத்திய வாங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும் குறித்த காலப்பகுதியில் உள்நாட்டு கடனை மேம்படுத்தல் மற்றும் பங்களாதேஷுக்கு மீள செலுத்த வேண்டிய கடன் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.