அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் சாத்தியம்

0
217

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கண்டி மாவட்ட முன்னாள் கல்வி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நேற்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி கிழக்குத் தொகுதியின் கிளை தொழிற்சங்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டுக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க பல நாடுகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருப்பதால், அடுத்த மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி கிடைத்தவுடன் நிறுத்தப்பட்ட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here