மொட்டு நினைத்தால் ஆட்சி கவிழும் – எஸ்.பி எச்சரிக்கை

Date:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்கும் திறன் தமக்கு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆனால், இதுவரை அப்படி எந்த திட்டமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

காலி முகத்திடல் போராட்டத்தின் போது போராளிகளை அந்த இடத்திலிருந்து அகற்றுவது தொடர்பில் தாம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பல யோசனைகளை முன்வைத்ததாகவும், ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படாததால் அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராளிகளை அகற்றும் முறைகள் குறித்து ஊடகவியலாளர் வினவிய போது எஸ்.பி.திஸாநாயக்க அவர்களிடம் கூறவே மாட்டேன் எனவும் அவை இரகசியமானவை எனவும் தெரிவித்தார். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...